ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள குறுகிய கடல் பாதையே ஹார்முஸ். உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் இந்த நீர்வழி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும். கச்சா எண்ணெய் விலையும் உயரும்!
கடந்த பிப்ரவரி மாதம் இந்த போர் தொடங்கிய நிலையில், அப்போது முதலே ஈரான் இந்த ஜலசந்தியை வழியாக கப்பல் போக்குவரத்தை அனுமதிக்கவில்லை. மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துகிறது. இப்போது சில நாடுகளை சேர்ந்த கப்பல்களை அனுமதித்தாலும் கூட அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கப்பல்கள் இந்த பாதையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஈரான் திட்டவட்டமாக கூறிவருகிறது. மேலும், இந்த ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்திலும் ஈரான் இருக்கிறது. ஆனால், இந்த சுங்க கட்டணத்தை அமெரிக்கா மிக கடுமையாக எதிர்த்து வருகிறது.
அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர் தொடங்கி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்த போர் மாத கணக்கில் தொடரும் நிலையில், அது டிரம்பிற்கு கடும் பிரஷரை ஏற்படுத்துவதாக இருக்கிறது. போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் காட்டியுள்ளது.
ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கைவிட ரெடியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறந்து, சர்வதேச கப்பல் போக்குவரத்தை அனுமதித்தால், அந்நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. "ஹார்முஸை திறந்து வழக்கமான கப்பல் போக்குவரத்தை ஈரான் அனுமதித்தால், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் முயற்சியை கூட கைவிட டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது". ஈரான் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் டிரம்ப் இந்த போரை ஆரம்பித்ததே அணு ஆயுதங்கள் குறித்து தான். ஈரான் புதிய அணு ஆயுதங்களை உருவாக்கும் திறமையை வளர்த்து வருவதாகவும் அதை தடுக்கவே டிரம்ப் இந்த தாக்குதலை ஆரம்பித்தார். அப்படியிருக்கும்போது அந்த டிமாண்டை கூட கைவிடும் அளவுக்கு டிரம்ப் இறங்கி வந்துள்ளார். ஈரானுடன் முழுமையான அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதையே இதுவரை அமெரிக்காவின் முக்கிய இலக்காக கருதப்பட்டது. ஆனால், தற்போது அதிபர் டிரம்ப் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக டிரம்ப் இது குறித்து யோசித்து வந்ததாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படாவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் போதும் என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதை டிரம்ப்பே தனது மூத்த ஆலோசகர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
அதாவது அணுசக்தி விவகாரத்தில் முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வர்த்தக கப்பல்கள் மீண்டும் சீராக செல்ல தொடங்கினால், அதையே ஒரு உடன்பாடாக ஏற்று அமெரிக்கா போரை முடித்து கொள்ளலாம். ஆனால், ஹார்முஸ் பழையபடி முழுமையாக திறக்க ஈரான் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
அந்த நிபந்தனைகளில், அமெரிக்கா தங்களுக்கு பல பில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும்.. ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், மத்திய கிழக்கு பகுதியில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது, பொருளாதார தடைகளை நீக்குவது மற்றும் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்கவேண்டும் எனவும் கூறியுள்ளது.
இந்த நிபந்தனைகள் டிரம்ப்பை மேலும் கோவப்படுத்தக்கூடியதாகவும், இதற்கு அவர் சம்மதிப்பது என்பது மிகவும் குறைவான வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த நீண்ட கால போர் இன்னும் நீளலாம் எனவும் அதற்கு ஈரான் தயாராகி வருகிறதோ சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
அமெரிக்க உள்நாட்டு அரசியலிலும் இந்த ஹார்முஸ் நீரினை விவகாரம் பெரும் கவனத்தையும் டிரம்ப்பின் ஆட்சியின் பெரும் கேள்விக்குறியையும் எழுப்பியுள்ளது. ஹார்முஸ் நீரினை வழியாக அதிகம் எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவிற்கு சென்றுகொண்டிருந்த நிலையில் ஈரானின் தடுப்பு நடவடிக்கை அமெரிக்காவின் பெட்ரோல் டீசல் வர்த்தகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திவருகின்றன. அதன் விளைவாக பெட்ரோல் விலை தினமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இன்னும் 3 மாதத்தில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் அவரின் பெரும்பான்மைக்கு இழப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் அதிபர் பதவியில் தொடர்ந்தாலும் எதுவுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார். எனவே, அதற்குள் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மூலம் அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றியை மக்களிடம் நிரூபிக்க வேண்டிய அழுத்தமும் டிரம்புக்கு அதிகரித்துள்ளது. மீண்டும் சர்வதேச கப்பல் போக்குவரத்தை ஈரான் அனுமதிப்பதற்காக ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் டிரம்ப் அடிபணிந்ததாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் டிரம்பை டேக் செய்து வருகின்றனர்.

LIVE 24 X 7