உலகம்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரானின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை விவகாரம்; ஈரானின் அடுத்த அதிரடி அறிவிப்பு!
Iran
ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் சர்வதேசக் கப்பல்களுக்கு சேவைக் கட்டணங்கள் விதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான தற்காலிகப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஹார்முஸ் நீரிணையானது ஈரான் மற்றும் ஓமான் நாடுகளின் முழுமையான கூட்டு இறையாண்மைக்கு உட்பட்ட பகுதி என்றும், இனிவரும் காலங்களில் இந்த கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் அனைத்து சர்வதேசக் கப்பல்களுக்கும் சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, இந்த நீரிணையில் நேரடியாகப் போக்குவரத்துச் சுங்கக் கட்டணம் (Transit Tolls) விதிக்க முடியாது. இதன் காரணமாக, இந்த வழியே செல்லும் கப்பல்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, வழிகாட்டுதல், அவசர மீட்புப் பணிகள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான "சேவைக் கட்டணம்" என்ற பெயரில் இந்தத் தொகை வசூலிக்கப்பட உள்ளது. இதுகுறித்த புதிய விதிமுறைகள் அடங்கிய கூட்டு அறிக்கை விரைவில் ஓமான் நாட்டுடன் இணைந்து வெளியிடப்பட உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.