K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16800&order=created_at&category_id=12

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் கண் தானம்? - சுகாதாரத்துறை விளக்கம்

உறவினர்களுக்கு தெரிவிக்காமல் இறந்தவர் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உறவினர்களின் அனுமதி இல்லாமல் கண்களை தானமாக எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளே அங்க மட்டும் போகாதீங்க..! - வனத்துறை விதித்த அதிரடி தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

ரூ.1.47 கோடி பண மோசடி - காவலர் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

முழு கொள்ளளவை எட்டிய கோமுகி அணை.. மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியதால் 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  

"இதுவரை காணாத உச்சம்" அதிகரித்த தங்கம் விலை..

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.112க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடங்களில் சோதனை.. குவியும் தொண்டர்கள்

இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தீவுத்திடலில் பட்டாசு கடைகள் - மக்களே முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் ஏலம் நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"போச்சு.. நாசமா போச்சு.." வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்.. என்ன நடக்கிறது கோவையில்..?

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.

#BREAKING || எதிர்பார்க்காத திடீர் என்ட்ரி.. முக்கியமான இடத்தை தொட்ட ED - தஞ்சாவூரில் பரபரப்பு

சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, ஒரத்தநாடு வீடு, கோடம்பாக்கம் தனியார் கட்டுமான நிறுவனம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7

Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7

#JUSTIN || சொல்லமுடியாத வேதனை - கண் கலங்கும் மதுரை மக்கள்.. | Kumudam News 24x7

மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.

#BREAKING || வங்கக்கடலில் 'டாணா' புயல் உருவானது - நினைக்க முடியாத வேகம் | Kumudam News 24x7

வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டாணா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைத்திலிங்கம் அறை வரை சென்று தூசி கூட விடாமல் அலசும் ED!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.

#justin மக்களே வெள்ள அபாய எச்சரிக்கை..!! - "தயாராக இருங்கள்.." | Kumudam News 24x7

உடுமலைப்பேட்டை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சங்கரநாராயண திருக்கோயில் கோமதி அம்பாள் சன்னதி முன்பு தேங்கிய மழை நீர் - பக்தர்கள் வேதனை

தென்காசியில் பெய்த கனமழையால் சங்கரநாராயண திருக்கோயில் கோமதி அம்பாள் சன்னதி முன்பு மழை நீர் தேங்கியது.

விடாமல் வெளுத்த கனமழை.. சட்டென சரிந்த கட்டிடம் - எகிறும் பலி எண்ணிக்கை - அதிர்ச்சி ரிப்போர்ட்!!

கனமழையால் பெங்களூரு கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.

#BREAKING | வைத்திலிங்கம் வீடு உட்பட 6 இடம் விடிந்ததும் அதிரடி கடும் | KumudamNews24x7 | ED | Raid

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

"பட்டசு வாங்க இதை செய்யாதீங்க.. - பின்னாடி அழுக வேண்டி இருக்கும்" | Kumudam News 24x7

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதாக விளம்பரம் போட்டு பல கோடி ரூபாய் மோசடி நடந்து வருவதாக சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன அதிபருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு | Kumudam News 24x7 | PM Modi meets Chinese President

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING || எம்.எல்.ஏ ஹாஸ்டலில் அமலாக்கத்துறை சோதனை | Kumudam News 24x7

சென்னையில் உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

#JUSTIN || ஒகேனக்கல் நீர்வரத்து - வினாடிக்கு வினாடி மாறும் நிலை..? அதிகரிக்கும் பதற்றம் | Hogenakkal

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.

#justin || பவானிசாகர் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியது | Kumudam News 24x7

ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது.

பறிபோகும் அமைச்சர் பதவி? அடுத்தடுத்து பறக்கும் புகார்கள் | Kumudam News 24x7

ராஜகண்ணப்பன் மீது தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் அவரிடம் உள்ள அமைச்சர் பதவியை பறிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசுர வேகத்தில் அடித்து வரும் வெள்ளப்பெருக்கு - திக்.. திக் பயத்தில் தி.மலை மக்கள் | Kumudam News24x7

நீர்வரத்து அதிகரிப்பால் மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

2 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | Kumudam News 24x7

கோவை மற்றும் திருப்பூரில் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.