K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16775&order=created_at&category_id=12

திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் காரணம் என்ன?

திருவள்ளூர் மாவட்டம் முக்கரம்பாக்கம் பகுதியில் சாலைவசதி கோரி முள் வேலியை சாலையில் வெட்டிப் போட்டு மக்கள் மறியல். புகாரளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என, பேச்சுவார்த்தைக்கு சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்

JUSTIN: TVK Maanadu Latest Update : 234 தொகுதிகள் – 234 வழக்கறிஞர்கள் மாஸ் காட்டும் தவெக

தவெக மாநாட்டையொட்டி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தற்காலிக பொறுப்பு வழிக்கறிஞர்கள் நியமனம். மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டரீதியிலான மேற்கொள்ளும் வகையில் அறிவிப்பு

Ramanathapuram Rain : சில்லென மாறிய ராமநாதபுரம் | Tamil Nadu Weather Update

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை. பட்டினம்காத்தான், கேணிக்கரை, அரண்மனை, வெளிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

"போரை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்" – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி

பயங்கரவாதம் மற்றும் அதற்கு நிதி வழங்குவதை தடுக்க ஒற்றுமையுடன் உலக நாடுகள் செயல்பட வேண்டும் என 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து – VPN மூலம் சதித்திட்டமா?

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக செல்போன்களை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. விபிஎன் பயன்படுத்தி செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடிய விடிய சோதனை நடத்திய அதிகாரிகள்... சிக்கிய முக்கிய ஆவணங்கள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவனுக்கு சொந்தமான திருச்சி MIT கல்லூரியில் 30 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Dana Puyal Update : தீவிர புயலாக உருவெடுக்கும் ”டானா”பாதிப்பு யாருக்கு?

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது.. பிரதமர் மோடி பங்கேற்பு

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. வெளியான சிசிடிவி காட்சி

கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11ம் தேதி நடந்த ரயில் விபத்து நடைபெற்றது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து நடந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது

ரிப்பன் மாளிகை அலுவலக வாசலில் கிடந்த ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு

சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாசலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல்.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடுவதற்காக பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

14 மாவட்டங்களுக்கு கனமழை.. எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் சீட்டு கட்டு போல் சரிந்த கட்டிடம்.. கட்டிட உரிமையாளர் மகனை கைது செய்த போலீஸ்

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட உரிமையாளரின் மகன், காண்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தவெக மாநாடு.. விறுவிறுப்பாக நடைபெறும் இறுதிகட்ட பணிகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. அதற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வயநாடு மக்களவை தொகுதி தேர்தல்.. பிரியங்கா காந்தி குடும்பத்துடன் வேட்பு மனு தாக்கல்

வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக குடும்பத்துடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார் பிரியங்கா காந்தி. அவருக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாநகரில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் 2 பள்ளிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

சீட்டு கட்டுப்போல் சரிந்த கட்டிடம்.. 15 மணி நேரமாக போராடும் வீரர்கள் - மீட்பதில் சிக்கல்..?

தொடர் கனமழையால் பெங்களூருவில் கட்டுமானத்தில் இருந்த 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த கட்டடம்  சட்ட விரோதமாக கட்டப்பட்டு வந்ததாகவும், கட்டட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திமுக கூட்டணி உடைந்துவிடும் எனக் கூறி ஜோசியராகவே எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

எங்களால் இனிமேல் பொறுக்க முடியாது.. தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தீபாவளி போனஸ் வழங்க கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

30 அடி ஆழ பள்ளத்தில் புரண்டு கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகளின் நிலை என்ன?

ஆந்திரா கடப்பா மாவட்டத்தில் உள்ள கதிரியில் இருந்து புலிவெந்தலாவுக்கு சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

டானா எச்சரிக்கை... 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்று புயலாக உருமாறியது. இது ஒடிசா அருகே கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் சட்டம்.. மாநில அரசுகளுக்கு அதிகாரம்... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

போதைப்பொருள் தொடர்பான சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

“அரசு எந்த உதவியும் செய்யல..” எம்எல்ஏ கோ.தளபதியை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.

வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை... குவியும் தொண்டர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.