K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16850&order=created_at&category_id=12

அமைதியான முறையில் பிரச்னைகளுக்கு தீர்வு.. ரஷ்ய அதிபரிடம் பிரதமர் வலியுறுத்தல்

உக்ரைன் போர் பதற்றத்துக்கு மத்தியில் காசன் நகரில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, பேசிய பிரதமர் மோடி புதின் உடனான நட்புக்கும் விருந்தோம்பலுக்கும் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கே சவால் விடும் நித்யானந்தா - நீதிபதி காட்டம்

நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ள நிலையில், தலைமறைவாய் இருந்து கொண்டு நிதித்துறைக்கு சவால் விடுகிறார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக தெரிவித்துள்ளது.

நாளை உருவாகும் புயல்.. 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேஸ் பங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம் உக்கடம் கேஸ் பங்க்-ல் கேஸ் நிரப்புவதற்காக வந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் கேஸ் நிரப்பியபோது எதிர்பாராத விதமாக கேஸ் கசிவு ஏற்பட்டதால் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்டத்தை நெருங்கிய பணிகள்.. மாநாடு வேலை மும்முரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மக்களே உஷார்! ஆன்லைன் பட்டாசு மோசடி.. Cyber Crime விடுத்த எச்சரிக்கை

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி சமூக வளைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு... NIA அதிகாரிகள் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட 3 பேரை NIA அதிகாரிகள் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடை..? நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 26 பேர் ஆஜர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள 26 பேரையும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

4 பல்கலை. மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.

சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே ஏற்பட்ட மோதல்.. வெளியான பகீர் சிசிடிவி காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்.. சேலத்தில் மக்கள் அவதி

சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கொட்டித் தீர்த்த கனமழை.. ஜவ்வாதுமலையில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அனுமதியின்றி பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டர்.. பள்ளி நிர்வாகம் அதிரடி புகார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முடங்கிய பெங்களூர்.. பேய் ஆட்டம் ஆடிய மழை

பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மூழ்கின. குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

"இர்ஃபானை மன்னிக்க முடியாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பட்டப்பகலில் நகைகள் கொள்ளை - பகீர் வீடியோ வெளியீடு

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி அணை நீர்வரத்து அதிகரிப்பு.. 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்... வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே பெய்த கனமழையால் மழைநீர் சாலைகளில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

ரூ.411 கோடி ஊழல் புகார்.. சிக்குகிறாரா ராஜ கண்ணப்பன்?

அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரூ.411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை சூறையாடியுள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நெருங்கியதா ஆபத்து..? 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடக்கு அந்தமான் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று இரவு ‘டானா’ புயலாக வலுப்பெற உள்ள நிலையில் பாம்பன், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தவெக நிர்வாகி உயிரிழப்பு - கதறி அழுத ஆனந்த்.. மன வேதனையில் விஜய் வெளியிட்ட பதிவு

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உடல்நலகுறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சரவணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

"வருத்தமா இருக்கு.." காரணத்தோடு புது புயலை கிளப்பிய இபிஎஸ்

தமிழ்நாடு போதைப்பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆக்‌ஷனில் இறங்கிய ரயில்வேத்துறை - 4 பேருக்கு சம்மன்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்