"பணியை இழக்க நேரிடும்..." நெருப்பாய் கொதித்த நீதிபதி
சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்ததால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது பணியை இழக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்ததால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது பணியை இழக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
32 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகளிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் அமல்படுத்த, காவல்துறை கால அவகாசம் கோரியது. இதை ஏற்க மறுத்து நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
துணை முதலமைச்சர் உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்தமா என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
வேலூரில் ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை கானொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவேற்காடு கோயிலில் முன்னாள் பெண் தர்மகர்த்தா ரீல்ஸ் வீடியோ எடுத்த வழக்கில் முன்னாள் தர்மகர்த்தா வளர்மதியின் மன்னிப்பை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ph.d., பட்டம் பெற்றவர் புகார் மனு அளித்தார். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களை மதிப்பதில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆண் வாக்காளர்கள் 3,07,90,791, பெண் வேட்பாளர்கள் 3,19,30,833, 3ம் பாலின வாக்காளர்கள் 8,964 பேர் உள்ளனர்
சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள கால்பந்து திடல்களை தனியார் மயமாக்க முடிவெடுத்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு கால்பந்து விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் உள்ள அம்மா பூங்கா முன்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தவெக மாநாட்டிற்கு சென்றபோது சென்னை தேனாம்பேட்டையில் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அரசுக் கல்லூரிகளில் கௌரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி சாலையில் விழுந்த நிலையில் பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,000க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375க்கு விற்பனையாகிறது.
யூடியூபர் இர்ஃபான் அறுவை சிகிச்சை அரங்கில் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் சென்னை - மதுரை விமான கட்டணம் ரூ.4,300 ஆக இருக்கும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் செவிலியர்களை பணியமர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்குப் பிறகு பறக்கும் ரயில் சேவை தொடங்கியது. 2 மார்க்கங்களிலும் தலா 45 ரயில் சேவைகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.
தியாகராயநகர் உட்பட சென்னையின் பல பகுதிகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வாங்க மக்கள் அதிகளவில் கூடியதால் நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது.