K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=16450&order=created_at&category_id=12

திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வார்த்தை போர்... நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவையில் சபை நாகரிகம் இல்லாமல் பேசினால் வெளியேற்றப்படுவீர்கள் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

கால்பந்து விளையாட்டு மைதானம் தனியார் மயம்... தீர்மானம் வாபஸ்

சென்னையில் செயற்கை புல் கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை திரும்பப்பெற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. மாநகராட்சியின் இந்த தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்- பசும்பொன் தேவரை புகழ்ந்த விஜய்

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சட்டென மாறிய வானிலை... சென்னையை குளிர்வித்த மழை

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும் வானிலை அய்வு தெரிவித்துள்ளது.

மதுரையில் இளைஞர்கள் அட்ராசிட்டி - வேகமாக பரவும் வீடியோ

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த காரில் வந்த இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆபத்தான முறையில் காரில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜவுளி வியாபாரிகள் சாலை மறியல்.. ஈரோட்டில் பயங்கர பரபரப்பு

ஈரோட்டில் மாநகராட்சி ஜவுளி வணிக வளாக வியாபாரிகள், சாலையோர ஜவுளி கடைகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் காளிராஜூவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தோழியை சீண்டிய ரசிகரை தீர்த்து கட்டிய நடிகருக்கு ஜாமின்

தனது தோழியை தொல்லை செய்ததாக ரசிகர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குவிக்கப்பட்ட போலீசார் - பரபரப்பின் உச்சம்..என்ன காரணம்?

வெளியூர் செல்லும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் 48,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 3 லட்சம் பேர்.. சென்னையை காலி செய்த மக்கள்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீராத ராகிங் கொடுமை - தலைநகரில் நடந்த கொடூரம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவர் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5ம் ஆண்டு மாணாவர்கள் 2 பேர் மீது கீழ்ப்பாக்கம்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தீபாவளிக்கு முன்னே வந்த மிக முக்கிய அறிவிப்பு..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக இருந்த 2,877 இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 307 டிசிசி மற்றும் 462 தொழில்நுட்ப பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் திடீரென போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் அரசு துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி பள்ளி மாணவர்களும், பெற்றோரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கோவை, திண்டுக்கல் மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - வெளியானது சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு கோவை - திண்டுக்கல்லுக்கு இன்று முதல் நவம்பர் 6 வரை மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை ரயில் நிலைய சந்திப்பில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்பட்ட ரயில் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

மருதுபாண்டியர்கள் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மரியாதை

மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விஜய்க்கு கோபம் வரவைக்க அஜித்துக்கு வாழ்த்து.. தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

விஜய்க்கு கோபம் வரவைப்பதற்காக அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து சொல்லியிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மீனவர்கள் கைது விவகாரம்... முதலமைச்சர் கொடுத்த பளிச் பதில்

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அதன்பின் உரையாற்றிய அவர், தமிழக மீனவர்களுக்கு எதிரான கைது நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம்; மத்திய அரசும் அதற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். 

தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

வாங்க முடியாத அளவுக்கு எகிறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,440க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.59,520க்கு விற்பனையாகிறது.

2026-ல் விசிக ஆட்சி..? திருமா வார்த்தையால் குஷியில் தொண்டர்கள்..

தமிழக ஊடகங்கள் தன்னை இருட்டடிப்பு செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

முத்துராமலிங்க தேவர் குருபூஜை: பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - குவிந்த போலீஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு

மொத்தமாக சென்னையை காலி செய்த மக்கள் - ஸ்தம்பிக்கும் சுங்கச்சாவடி - அதிர்ச்சி காட்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்

#BREAKING | பயணிகள் கவனத்திற்கு - ரயில்கள் திடீர் நிறுத்தம்.. மக்கள் அவதி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தம்

பெண்களின் Favourite.. "விடக்கூடாது.." - "எவ்ளோ பழசானாலும் இதோட பவர் தனி"

பெண்களின் Favourite.. "விடக்கூடாது.." - "எவ்ளோ பழசானாலும் இதோட பவர் தனி"

விஜய்க்காக உயிரையே கொடுத்த ரசிகர்கள் - மாநாடு நாளில் நடந்தது என்ன..?

விஜய்க்காக உயிரையே கொடுத்த ரசிகர்கள் - மாநாடு நாளில் நடந்தது என்ன..?