சென்னையில் நடைபெறும் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, முதல்வர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாநாட்டின் ஏற்பாடுகள், நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான திட்டங்கள் குறித்து முதல்வரிடம் அமைச்சர் விளக்கினார். மேலும், மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் எஸ். கீர்த்தனா நேற்றைய தினம் தனது எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்து, நாளை நடைபெறும் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதுடன், மாநிலத்தில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குவதும் மாநாட்டின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் விரிவாக்கம், புதிய முதலீட்டு திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறைகளில் உருவாகும் வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு புதிய வேகத்தை அளிப்பதில் ‘வெற்றி தமிழ்நாடு 2026’ மாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முதலீடுகள் மூலம் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி, அதிகளவிலான வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த மாநாட்டின் முக்கிய இலக்காக உள்ளது.

LIVE 24 X 7