தமிழ்நாடு

TN Election 2026: 11 மணி நிலவரம்: 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.

TN Election 2026: 11 மணி நிலவரம்: 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் பதிவு!
11 am status
தமிழக சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி, 2 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 712 வாக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று (ஏப்.23) சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. மொத்தமாக 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 42.45% வாக்குபதிவாகியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ள நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 2,15,40,712 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் பின்வருமாறு:-

அரியலூர் – 36.11 %

செங்கல்பட்டு – 37.17%

சென்னை – 35.47 %

கோவை – 38.62 %

கடலூர் – 36.30 %

தர்மபுரி – 38.28 %

திண்டுக்கல் – 39.05 %

ஈரோடு – 41 %

கள்ளக்குறிச்சி – 37.30 %

காஞ்சிபுரம் – 39.48 %

கன்னியாகுமரி – 34.68 %

கரூர் – 39.70 %

கிருஷ்ணகிரி – 36.53 %

மதுரை – 36.22 %

மயிலாடுதுறை – 35.33 %

நாகபட்டினம் – 37.77 %

நாமக்கல் – 41.41 %

பெரம்பலூர் – 37.89 %

புதுக்கோட்டை – 37.12 %

ராமநாதபுரம் – 34.02 %

ராணிப்பேட்டை – 38.70 %

சேலம் – 40.56 %

சிவகங்கை – 35.35 %

தென்காசி – 36.31 %

தஞ்சாவூர் – 36.54 %

நீலகிரி – 32.62 %

தேனி – 37.35 %

திருவள்ளூர் – 36.71 %

திருவாரூர் – 37.19 %

தூத்துக்குடி – 35.16 %

திருச்சி – 38.08 %

திருநெல்வேலி – 34.05 %

திருப்பத்தூர் – 37.49 %

திருப்பூர் – 42.45 %

திருவண்ணாமலை – 38.25 %

வேலூர் – 37.99 %

விழுப்புரம் – 38.40 %

விருதுநகர் – 38.05 %

ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. அதே போன்று நீலகரி மாவட்டத்தில் 32 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.