திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது வடமாநிலப் பெண் குழந்தை பாலியல் கொடூரத்திற்கு உள்ளாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதியில் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்த 3 வயது வடமாநிலப் பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. பதற்றமடைந்த பெற்றோர் பொதுமக்களுடன் சேர்ந்து தேடியபோது, அருகில் உள்ள முட்புதர் ஒன்றில் பச்சிளம் குழந்தை பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தைக்குக் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் குழந்தை கொண்டு செல்லப்பட்டு, தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டது. எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்ற இளைஞரைப் பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவத்தில் ஒரே அறையில் தங்கியிருந்த 4 வடமாநில இளைஞர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டி, பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளியைக் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

LIVE 24 X 7