தமிழ்நாடு

மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழை மற்றும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் மட்டும் இன்று செயல்படாது.

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழையின் தாக்கத்தைப் பொறுத்து பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிகளுக்கான விடுமுறை அறிவிப்பு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.