சென்னையில் இன்று (செப்.30) ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தங்கம் விலை
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,120-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.13,640-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று (செப். 30) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,680-க்கு விற்பனையாகிறது. அதேபோல, கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான உயர்வு காணப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனையாகிறது. மேலும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2.45 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் சூழல்கள், உலக அளவிலான பங்குச்சந்தை செயல்பாடுகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றம், கச்சா எண்ணெய் விலை மற்றும் முதலீட்டாளர்களின் தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வம் ஆகியவை தங்கத்தின் அன்றாட விலை மாற்றங்களைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாக அமைவதாகப் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LIVE 24 X 7