தொடர்ந்து 5 நாட்களாக குறையும் தங்கம் விலை... நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

தொடர்ந்து 5 நாட்களாக குறையும் தங்கம் விலை... நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வரும் நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடியாக குறைந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author: Bhavani v தமிழ்நாடு

கடந்த 9-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும், கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,255-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரியத் தொடங்கியது. கடந்த 10-ந்தேதி சவரனுக்கு ரூ.360-ம், 11-ந்தேதி ரூ.1,560-ம், 12-ந்தேதி ரூ.1,600-ம் குறைந்தது. நேற்று(நவ.,-13) சவரனுக்கு மேலும் ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,01,560-க்கு விற்பனையானது.

இன்றும் அதிரடி சரிவு!

இந்த நிலையில், சென்னையில் இன்று (நவம்பர் 14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,920-க்கும், கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.12,615-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளதால், தங்கம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.195-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.