சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 10-ஆம் தேதி ஆபரணத் தங்கம் கிராம் ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
அதன் பின்னர் நேற்று காலையில் சற்று சரிவைக் கண்டு, சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640-க்கு விற்பனையானது. ஆனால், மாலையிலேயே அதிரடி மாற்றமாகச் சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,200-க்கும், கிராம் ரூ.14,400-க்கும் விற்பனையானது.
மாலையில் தொடங்கிய அந்த விலை உயர்வு இன்றும் தொடர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,600-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான உயர்வு காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

LIVE 24 X 7