சர்வதேச சந்தை நிலவரங்களின் அடிப்படையில் நாள் தோறும் மாற்றியமைக்கப்படும் தங்கத்தின் விலை, கடந்த சில காலமாகவே ஒரு சவரன் 1 லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாவதால் நகைப்பிரியர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். நேற்று சற்றே குறைந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்தைச் சந்தித்துள்ளது.
தங்கம் விலை
நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 வரை அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கும், ஒரு கிராம் ரூ.13,140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள், இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,760 என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல், கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 1 லட்ச ரூபாய்க்குக் கீழ் தங்கம் விலை குறையாமல் இருப்பது நடுத்தர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளி விலையும் இன்று சற்றே உயர்ந்துள்ளது. நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.230-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 சரிந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,30,000-க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கு விற்பனையாகிறது. அதேபோல் கிலோவிற்கு ரூ.5,000 வரை அதிகரித்து, இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

LIVE 24 X 7