தமிழ்நாடு

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.

கணிசமாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் நிம்மதி!
Gold Rate
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று (ஜூன் 17) கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று (ஜூன் 16) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை லேசான வீழ்ச்சியைக் கண்டிருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,12,480-க்கும், ஒரு கிராம் ரூ.14,060-க்கும் விற்பனையானது. அதேபோல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,75,000 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.

தங்கம் விலை நிலவரம்

நேற்றைய சரிவைத் தொடர்ந்து, இன்றும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஜூன் 17) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,030-க்கு விற்பனையாகி வருகிறது.

மாற்றமில்லாத வெள்ளி விலை

தங்கத்தின் விலை இன்று சரிவைச் சந்தித்திருந்தாலும், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய நிலையே நீடிக்கிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி எவ்வித விலை மாற்றமுமின்றி ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.