சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, காயம் காரணமாகத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஏலத்தில் ரூ.4.8 கோடிக்கு எடுக்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, தசைநார் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். கடந்த ஏப்ரல் 14 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, அவருக்கு வலது இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் அது 'கிரேடு 2' தசை கிழிவு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீண்டு வர 3 மாதங்கள் ஆகும்
கலீல் அகமதுவின் இந்த காயத்தைக் குணப்படுத்தக் குறைந்தது 10 முதல் 12 வாரங்கள் வரை ஓய்வு தேவைப்படும் என மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இதனால் அவரால் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தொடரின் ஆரம்பத்திலிருந்தே விளையாடிய 5 போட்டிகளிலும் சிஎஸ்கே-விற்காக முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வந்த இவரின் விலகல், அணியின் பந்துவீச்சு பலத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
காயங்களால் தவிக்கும் சென்னை அணி
ஏற்கனவே சென்னை அணியின் முதுகெலும்பான எம்.எஸ். தோனி, கணுக்கால் காயம் காரணமாக இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூடக் களம் காணவில்லை. இந்த நிலையில், நல்ல ஃபார்மில் இருந்த கலீல் அகமதுவும் வெளியேறியிருப்பது சிஎஸ்கே நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி, கடந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், கலீல் அகமது விலகியிருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7