'விஜய்யை நம்பி எடப்பாடிய கை கழுவுனதுக்கு இந்த அவமானம்தான் மிச்சமா? டெல்லியிலேயே அரசியல் செய்த நாம, இன்னைக்கு கத்துக்குட்டிகளுக்கு பின்னாடி கைகட்டி நிக்கிறோமே' என்று கட்சி தாவிய அ.தி.மு.க. மாஜிக்கள் புலம்புவதால் த.வெ.க.வில் தடாலடி புயல் வீச ஆரம்பித்துள்ளது!
தமிழகத்தில் தடாலடியாக த.வெ.க. ஆட்சி அமைந்தபின் விறுவிறுவென காலியாகும் கூடாரம் என்றால் அது அ.தி.மு.க.வுடையதுதான். மாஜி அமைச்சர்கள், மாஜி எம்.எல்.ஏக்கள், சிட்டிங் மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கொத்துக் கொத்தாக நிர்வாகிகள் பனையூர் ஜோதியில் ஐக்கியமாகிவருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க. தனது 'கோட்டை' என்று சொல்லிக்கொள்ளும் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் அதிக இடப்பெயர்ச்சிகள் நடக்கின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் என அம்மண்டல அதி.மு.க. கிட்டத்தட்ட காலி எனும் நிலைதான். இப்படியான சூழலில்தான் திடீர் ட்விஸ்ட்!
அதாவது, த.வெ.க.வில் இணைந்துள்ள அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள், இதுவரை தங்களுக்கு எந்தப் பதவியும் தரப்படாததால், விரக்தியில் உள்ளனர். மேலும், அரசியல் அனுபவமில்லாத த.வெ.க.வின் இளம் நிர்வாகிகள் பின்னால் கைகட்டி நிற்க வேண்டியுள்ளதாகவும் புலம்புகின்றனர். இந்த நிலையில், கொங்கு மண்டல மாஜிக்கள் சிலர் சமீபத்திய ஆடி வெள்ளி நாளில் பொள்ளாச்சியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கூடி இதுகுறித்துப் பேசியுள்ளனர்.
அப்போது, 'செங்கோட்டையன் நம்மள கண்டுக்கவே மாட்டேங்கிறார்' என்று ஆதங்கமாக புலம்பியவர்கள், அடுத்து என்ன செய்வது என்பது குறித்தும் சில முடிவுகள் எடுத்துள்ளனர். இதற்கிடையே இந்த தகவல், உளவுத்துறை வழியே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ஜான் ஆரோக்கியசாமி என்று முதல்வர் விஜய்யைச் சுற்றியுள்ள அதிகார மையங்களின் கவனத்துக்குச் செல்ல, அவர்கள் அலர்ட் ஆகியிருக்கிறார்கள்.
ஆடி வெள்ளி அதிருப்தி மீட்டிங்கில் கலந்துகொண்ட மாஜி அதிமுக மாவட்டச் செயலாளர் நம்மிடம் இப்படி விவரித்தார். "பதவி விஷயத்தில் த.வெ.க. தலைமை எங்களை கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் ஒன்றும் அரசியல் கத்துக்குட்டிகள் இல்லை. டெல்லி வரை அரசியல் செய்யும் ஆளுமைகள். த.வெ.க.வுக்கு தாவியதால் எங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. விஜய்க்குத்தான் எங்களால் தேசிய அளவில் பெரிய மதிப்பு கிடைத்தது.
அதாவது முதல்வர் நாற்காலியில் விஜய் அமர்வாரா, மாட்டாரா என்ற இழுபறி நிலை நீடித்த இக்கட்டான சூழலில், அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக விஜய் பக்கம் போக ஆரம்பித்தோம். பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகள் எல்லாம் இதை உற்று நோக்கின. தேசிய ஊடகங்களும் இதை பரபரப்பாக அலசின.
இதன் மூலம் தமிழகம் தாண்டி தேசிய அளவில் விஜய்யின் அரசியல் மீது நம்பிக்கை உருவானது. சொல்லப்போனால், விஜய்யை 'புதிய எம்.ஜி.ஆர்' என எஸ்டாபிளிஸ் செய்ததே நாங்கள்தான். இன்றும் எங்கள் ஆதரவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். வாரா வாரம் பனையூர் த.வெ.க. அலுவலகத்தை அரசியல் ஆரவாரமாக்குவது அ.தி.மு.க.வின் வி.ஐ.பி.க்கள்தான். ஜெயித்த கையோடு. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.கவில் இணைந்ததெல்லாம் நாங்கள் செய்த தியாகங்கள்.
ஆனால் இதையெல்லாமல் புரிந்துகொள்ளாமல், இப்போது வரை எங்களை வெறும் உறுப்பினர் லெவலிலேயே வைத்திருக்கிறார்கள். அரசியலின் அரிச்சுவடிகூட தெரியாத த.வெ.க.வின் இளம் முகங்களுக்கு பின்னால் நிற்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறோம். இதையெல்லாம் எப்படி சகித்துக்கொள்வது? கொங்கு மண்டலத்தில் மட்டும் அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.வுக்கு மாறியோரை கவனியுங்கள். முன்னாள் அமைச்சர்கள் கே.வி.ராமலிங்கம், கேபிள் ராதாகிருஷ்ணன், எம்.எஸ்.எம். ஆனந்தன், 2026 தேர்தலில் ஜெயித்த எம்.எல்.ஏ.க்கள் கரூர் விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன் ஜெயசீலன், எட்டிமடை சண்முகம், சாந்தி ராமு, முன்னாள் மேயர் விசாலாட்சி, சிட்டிங் மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், தாஜ் கோபாலகிருஷ்ணன் என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
ஆனால், அ.தி.மு.க.விலிருந்து த.வெ.க.வுக்கு தாவிய முக்கியஸ்தர்களின் நிலை எவ்வளவு மோசம் என்பதை சமீபத்தில், ஊட்டியில் நடந்த முதல்வர் பிறந்தநாள் விழா மேடையில் மாஜி மாவட்டச் செயலாளர் வினோத் மற்றும் மாஜி குன்னூர் எம்.எல்.ஏ. ராமுவுக்கு நடந்த அலட்சியத்தின் மூலமே புரிந்துகொள்ளலாம். இந்த நிலை நீடிப்பது நல்லதல்ல.
த.வெ.க.வில் இன்றைக்கு விஜய்க்கு அடுத்த நிலையில் இருப்பவர்களில் ஒருவரான அ.தி.மு.க.வின் மாஜி முகமான செங்கோட்டையனை நம்பித்தான் கட்சியில் இணைந்தோம். ஆனால் செங்கோட்டையனிடம் பதவி குறித்து கேட்டால், இந்தா அந்தா என இழுக்கிறார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியில் சேரும்போதெல்லாம் இனிப்பாக பேசினார். ஆனால், பதவி கைகூடவில்லையே. ஆலமரமான அ.தி.மு.க.வின் விழுதாக இருந்த நாங்கள் இன்றைக்கு த.வெ.க.வின் காலடியில் ஒரு புல் பூண்டு லெவலுக்குக்கூட இல்லை. எங்களது வீடுகளிலேயே எங்களை 'தேவையா இந்த அவமானம்' என திட்டுகிறார்கள்.
அதனால் த.வெ.க. தலைவர் விஜய் உடனடியாக இதில் நல்ல முடிவெடுத்து எங்களுக்கு உரிய அங்கீகாரம் தரவேண்டும். ஒரு சில வாரங்களுக்குள் இது நடக்காவிட்டால், எங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ள அடுத்து என்ன செய்யலாம் என்றுதான் பொள்ளாச்சியில் ஆலோசித்து முடிவெடுத்தோம்" என்றார்.
நாம் இதுபற்றி தவெக பொதுச்செயலாளரான அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டபோது, "முதல்வரை நம்பி த.வெ.க.வின் பாதுகாப்பான கரங்களுக்குள் அவர்கள் இணைந்துள்ளார்கள். அவர்களுக்கு உரிய பதவிகள் உள்ளிட்ட அங்கீகாரத்தை தலைவர் தளபதி விரைவில் வழங்குவார். இதை சமீபத்தில் மேடையிலேயே விஜயபாஸ்கர் முன்னிலையில் தெரிவித்தேன். நிச்சயம் நல்லது நடக்கும்" என்றார்.
நம்பிக்கை, அதானே எல்லாம்!
- குமுதம் செய்திகளுக்காக எஸ்.ஷக்தி.

LIVE 24 X 7