இந்தியக் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன், காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
சாய் சுதர்சன் அண்மைக் காலமாக இந்திய அணியில் 3-ஆம் எண் பேட்டராகக் களம் இறங்கி வந்தார். இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், அவரது பங்கேற்பு உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்தே அமையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் உயர்மட்டப் பயிற்சி மையத்தில் சாய் சுதர்சன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தபோதிலும், ஆகஸ்ட் 15 அன்று காலியில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் குணமடைய வாய்ப்பில்லை என மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இதனால் அவர் தொடரிலிருந்து முழுமையாக விலக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக விளையாடும் வீரரைத் தேர்வுக் குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாய் சுதர்சன் இல்லாத நிலையில், தேவ்தத் படிக்கல் 3-ஆம் இடத்தில் களம் இறங்க வாய்ப்புள்ளது. கொழும்பில் நடைபெற்ற மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் படிக்கல் சிறப்பான சதமடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பயிற்சி ஆட்டத்தின் போது விரலில் காயம் அடைந்ததால், பயிற்சிப் போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்திய அணி ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக இந்தத் தொடரில் இடம் பெறாத நிலையில், சாய் சுதர்சனும் விலகியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7