தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு விஜய் அபார வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில், விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியிலேயே எம்.எல்.ஏ.வாகத் தொடர விஜய் விருப்பம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது.
விஜய் ராஜினாமா செய்யும் பட்சத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. லால்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அவர், இந்த முறை திருச்சி கிழக்கில் களம் இறக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

LIVE 24 X 7