தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்னைகள் மற்றும் வீடுகளுக்குத் திடீரென உயர்ந்து வந்த மின்கட்டணம் தொடர்பாகப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், மின்கட்டணக் குளறுபடிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபகாலமாகப் பல மாவட்டங்களில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைக் கண்டித்துப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, மே மாதத்தைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் வீடுகளுக்கான மின்கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பலரும் மின்வாரிய அலுவலகங்களில் புகாரளித்து வருகின்றனர். மேலும், சிலர் தங்களின் மின்கட்டணப் ரசீதுகளைச் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, ஜூலை மாத மின்கட்டண உயர்வு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் கள ஆய்வு நடத்தி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மின்சார வாரியத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை.
3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது.
இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.
இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

LIVE 24 X 7