மதுரையில் நள்ளிரவில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமும், கோவையில் சிறுமி கொலை செய்யப்பட்ட நிகழ்வும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாநிலத்தின் சட்ட ஒழுங்கு குறித்துத் திமுக எம்பி கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
கோவை & மதுரையில் கொடூர சம்பவம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தக் பகுதி அருகே, நள்ளிரவில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரைக் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமையுடன் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
திமுக எம்பி கனிமொழி கண்டனம்
இந்த அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
"மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு. சட்ட ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேகமாகவுள்ளது" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LIVE 24 X 7