தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியின் தோல்விக்குச் சசிகலாவின் புதிய கட்சி பிரித்த வாக்குகள் முக்கியக் காரணியாக அமைந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி தடை விதித்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா 'அனைந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற புதிய கட்சியைத் தொடங்கி வேட்பாளர்களைக் களமிறக்கினார். இவரது கட்சி வேட்பாளர்கள் பிரித்த வாக்குகளால், அதிமுக கூட்டணி சுமார் 5 தொகுதிகளில் வெற்றியை நழுவவிட்டுள்ளது.
முக்கியத் தலைவர்களின் தோல்விக்குக் காரணம்
குறிப்பாக, சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக வேட்பாளரிடம் 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் சசிகலா கட்சியின் வேட்பாளர் இசக்கிராஜா 11,602 வாக்குகள் பெற்றதே நயினாரின் தோல்விக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதேபோல், முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 47,501 வாக்குகள் பெற்ற நிலையில், சசிகலா கட்சியின் வேட்பாளர் ராம்குமார் பாண்டியன் 40,422 வாக்குகளைப் பிரித்து அதிமுகவின் வெற்றியைத் தடுத்துள்ளார்.
உசிலம்பட்டியில் தவெக வெற்றி
உசிலம்பட்டி தொகுதியிலும் சசிகலாவின் கட்சி அதிமுகவிற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அதிமுக வேட்பாளர் வெறும் 1,805 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்திடம் தோல்வியடைந்தார். இந்தத் தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளர் அயப்பன் பெற்ற 16,620 வாக்குகள், அதிமுகவிற்குச் செல்ல வேண்டிய வாக்குகளாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியைச் சசிகலாவின் கட்சி கணிசமாகப் பாதித்துள்ளது உறுதியாகியுள்ளது.

LIVE 24 X 7