தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சியான தி.மு.க.வினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பேரவை வளாகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு கூடும் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்கள் மத்தியில் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் ஆளுநர் உரையுடன் பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவைக்குக் கருப்பு பேட்ஜ் அணிந்து வருகை தந்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி இந்த அதிரடிப் போராட்டத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.
"வாயத் திறங்க CM!"
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் தொடர்ச்சியாகவும், அதிகளவிலும் பதிவாகி வருகின்றன. இந்தச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, த.வெ.க. அரசுக்குத் தங்களின் பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்யும் நோக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் தங்களது சட்டையில் கருப்பு பேட்ஜ் குத்தியுள்ளனர். குறிப்பாக, அந்த பேட்ஜில் "வாயத் திறங்க CM!" என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
கேள்வி நேரத்தில் அனல் பறக்கும்
புதிய அரசின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே எதிர்க்கட்சிகள் தங்களின் கடுமையான எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால், இன்றைய கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களுடன் பரபரப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பவுள்ள அடுக்கடுக்கான கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியான த.வெ.க. தரப்பில் என்ன பதில் அளிக்கப்படப் போகிறது என்பதை ஒட்டுமொத்தத் தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

LIVE 24 X 7