மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 5 மாநில தேர்தல் நடைபெற்ற சமயத்தில் விலை மாற்றமின்றி இருந்த நிலையில், தற்போது தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலை உயர்த்தப்பட்ட நிலையில், எரிபொருள் விலையேற்றம் சாமானிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 3.14 அதிகரிக்கப்பட்டு, ரூ. 103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ. 3.11 உயர்த்தப்பட்டு, ரூ. 95.50 என்ற நிலையை எட்டியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரித்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் தொடரும் பட்சத்தில், வரும் நாட்களில் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LIVE 24 X 7