சினிமா

ஆத்தி இவ யார்ரா?.. 'சீன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘சீன்’ படத்தின் முதல் பாடலைப் படக்குழுவினர் இன்று (அக்.8) வெளியிட்டுள்ளனர்.

ஆத்தி இவ யார்ரா?.. 'சீன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!
Scene Movie

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படமான ‘சீன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ பாடலைப் படக்குழுவினர் இன்று (அக்.8) வெளியிட்டுள்ளனர்.

'ஆவேஷம்' இயக்குநர் - சூர்யா கூட்டணி

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஆவேஷம்’ படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘சீன்’. இப்படத்தில் நடிகர் சூர்யா முற்றிலும் புதுமையான தோற்றத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

இப்படத்தில் மலையாள நடிகர்களான நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ் மற்றும் இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்திற்கு வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான 'ழகரம் ஸ்டூடியோஸ்' இணைந்து சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரிக்கின்றன.

வெளியானது 'ஆத்தி இவ யார்ரா' பாடல்

இப்படத்தின் முதல் பாடலான ''ஆத்தி இவ யார்ரா' பாடல் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை இன்ஸ்டா பிரபலம் ராஜ்பிரியன் எழுதிப் பாடியுள்ளார்.

திரையரங்குகளில் ரிலீஸ்

சூர்யா நடிப்பில் ஏற்கனவே வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ‘சீன்’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டைட்டில் டீசர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.