விமர்சனம். அப்பா குட்டி
கையில் குழந்தையுடன் ஊட்டிக்கு வரும் விஜய் ஆண்டனி, தாய் இல்லாத குறை தெரியாத அளவிற்கு அந்தக் குழந்தையை பாசமாக வளர்க்கிறார். அவள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும்போது பள்ளி ஆசிரியை ப்ரீத்தி அஸ்ரானி விஜய் ஆண்டனி மீது காதல் கொள்கிறார். ஆனால் ப்ரீத்தியின் காதலை நிராகரிக்கும் விஜய் ஆண்டனி மகளுடன் ஊரைவிட்டே போக முடிவு செய்கிறார்.
அப்பொழுது மகளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட, அவளுக்கு வந்திருப்பது உயிருக்கு ஆபத்தான நோய் என தெரிகிறது. அதுமட்டுமல்ல அந்த நோய்க்கு மருத்துவர்கள் சொல்லும் தீர்வு, சிகிச்சை இருவரது வாழ்க்கையிலும் இருக்கும் பல மர்மமான பக்கங்களை வெளிப்படுத்துவதோடு, இன்னும் பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது… இதற்கு மத்தியில் ப்ரீத்தியின் காதல் என்ன ஆனது என்பது கிளைமாக்ஸ்…
ஒரு குழந்தையை மையமாக வைத்து மொத்த கதையையும் நகர்த்தியதோடு, தமிழ் சினிமாவில் பலரும் சொல்ல தயங்கும், விஷயங்களை இயக்குநர் மு.மாறன் வெளிப்படையாக அணுகி இருப்பது பாராட்டுக்குரியது. திரைக்கதையில் ஏகப்பட்ட ட்விஸ்ட்... குழந்தையின் உயிரை காப்பாற்ற விஜய் ஆண்டனி போராடும் பல காட்சிகள் மனதை தொடுகின்றன. கிளைமாக்ஸ் கோர்ட் சீனில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது...
விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பு வேற லெவல்... பக்ஸ், ஜென்சன், முத்துகுமார், ஶ்ரீஜா, பிரவீணா என உடன் நடித்த அனைவரும் பிரமாதம். ஒளிப்பதிவு, இசை தரம். விஜய் ஆண்டனியை ப்ரீத்தி அஸ்ரானி காதலிப்பதற்கான அழுத்தமான காரணங்கள் இல்லாதது சின்ன குறை...
அப்பா குட்டி - நெஞ்சத்தை கிள்ளுகிறாள்
3 ஸ்டார்
LIVE 24 X 7









