இந்தக் கருத்து, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. “இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி முயற்சியில் அமெரிக்கா எவ்வித பங்கும் வகிக்கவில்லை” என்று மோடி கூறியிருந்தார். தற்போது மீண்டும் ட்ரம்ப் இதை மறுத்து கூறியிருப்பது, சர்வதேச அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இது தொடர்பாக இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அனலைஸ்ட்கள் கூறுவதாவது, “பாகிஸ்தானுடன் ஏற்பட்ட எந்த ஒரு மோதலும் இந்தியா தனக்குத்தானே கையாளும். அமெரிக்காவிடம் எந்த நேரமும் தலையீடு கேட்டதில்லை” என்று தெரிவித்துள்ளது.
வாக்குச் சாவடிகளுக்குள் செல்வதற்கு முன் இந்தியா தொடர்பான விஷயங்களில் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது, அவரது தேர்தல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
LIVE 24 X 7









