இந்த நிலையில், நேற்று இரவு ஏற்ததாழ 8 மணிக்கு கருக்குபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மின் துண்டிப்பானது ஏற்பட்ட நிலையில் பல மணிநேரம் அப்பகுதி மக்கள் காத்திருந்தும் மின்சாரம் அப்பகுதிக்கு வரவில்லை. இதனால், கொந்தளித்த அப்பகுதி மக்கள் தீடிரென சுமார் 200-க்கும் மேற்பட்டோர் முக்கிய பிரதான சாலையான காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அச்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மின் இணைப்பு திரும்ப கிடைக்க பெற்றால் மட்டுமே களைந்து செல்வோம் என கூறினர். அவ்வப்போது மின்வெட்டு இருப்பதாகவும் இதனால் தாங்கள் நிம்மதியாக இருக்க முடிய்வில்லி, இருப்பதோடு தங்களது குழந்தைகள் தூங்க முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கூறி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு களைந்து செல்லாமல் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு அவ்வழியாக செல்ல வந்த முக்கியஸ்தர்கள் அழைத்து செல்லும் VIP ESCORT வாகனத்திற்கு மட்டுமே வழிவிட கூறியும் பொதுமக்கள் மறுத்தனர். இதனையெடுத்து அடுத்த சற்று நேரத்தில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுக்கு சிகிச்சைகாக செல்ல அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ்க்கு அப்பகுதி மக்களே வழி ஏற்படுத்தி கொடுத்தனர். ஆனால், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாரே சிலர் பொதுமக்கள் செய்த செயலை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி அப்பகுதியில் மின் இணைப்பு திரும்ப கிடைக்கப்பெற்ற நிலையில், அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தினை கைவிட்டு களைந்து சென்றனர். மிக முக்கிய பிரதான சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
LIVE 24 X 7









