சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் சொந்த ஊருக்குச் செல்லக் காத்திருக்கும் வட மாநிலப் பயணிகளைக் குறிவைத்து, ரயில் டிக்கெட் புக் செய்து தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை நூதன முறையில் திருடி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடி சம்பவம் மற்றும் கைது
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ராம் (24) மற்றும் தினேஷ்குமார் முகியா (21) ஆகிய இருவரையும் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே வைத்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட 18 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 13-ஆம் தேதி பீர்பால் என்ற பயணி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனது சொந்த ஊருக்குச் செல்லக் காத்திருந்தபோது, அங்கு சென்ற இருவரும் "உடனடியாக ரயில் டிக்கெட் புக் செய்து தருகிறோம்" என்று கூறி, அவரைச் சேத்துப்பட்டு வரை அழைத்து வந்துள்ளனர்.
பின்னர், பீர்பாலின் செல்போனிலேயே புக் செய்து தருவதாகக் கூறி, அவரிடம் இருந்து செல்போனைப் பெற்று, UPI பாஸ்வேர்டையும் கேட்டறிந்துள்ளனர். டிக்கெட் புக் செய்வது போல நடித்து, செல்போனைத் திருடிச் சென்றதோடு, பீர்பாலின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் UPI மூலம் தங்களது கணக்கிற்கு மாற்றிக்கொண்டுள்ளனர். இது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
மோசடியின் நெட்வொர்க் மற்றும் பணம் பறிப்பு முறை
கைது செய்யப்பட்ட இருவரும் இதுவரை 20க்கும் மேற்பட்ட வட மாநிலப் பயணிகளைக் குறி வைத்து இந்த நூதன வழிப்பறியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் UPI பாஸ்வேர்ட் மூலம் பல லட்சம் ரூபாயைத் திருடி, அந்தப் பணத்தை பீகாரில் உள்ள தங்களுக்குத் தெரிந்த புரோக்கர்களின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வந்துள்ளனர்.
இந்தப் பணத்தை மாற்றிக் கொடுக்கும் புரோக்கர்கள், ரூ.1,000க்கு ரூ.280 பணத்தை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள பணத்தை இவர்களின் வீட்டிற்குக் கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி சென்னை வந்த இவர்கள், ரயில் நிலையங்களை நோட்டமிட்டு நூதன வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் எத்தனை நபர்களிடம் மோசடி செய்துள்ளனர், எந்தெந்த மாநிலங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LIVE 24 X 7