கோயிலின் பரம்பரை அறங்காவலர் P.S.M.பாபு(எ)பொன்னம்பலம் மற்றும் செயல் அலுவலர் சு.பிரபாகரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மங்களகரமான ஸ்ரீ விஸ்வாவஸூ வருஷம் சித்திரை மாதம் 8,9 ஆம் தேதி (21.4.2015 முதல் 22.4.2025 வரை) ஆகிய இரு தினங்கள் அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் சுவாமிக்கு சந்தனம் களையப் பெற்று நிஜரூப தரிசனம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வருகிற (23.4.2025) புதன்கிழமை சித்திரை சதய நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10 மணிக்கு மேல் அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணீஸ்வர் சுவாமிக்கு சந்தன காப்பு வைபவ விழா வெகு விமர்சையாக நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட விழாவில் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு அருள்மிகு கொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வர் திருவருளை பெற்று வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில் இன்று நிஜரூப தரிசனம் தொடங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
LIVE 24 X 7









