திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று (டிசம்பர் 3) மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா" எனப் பக்திப் பரவசத்துடன் தீபத்தைக் கண்டு வழிபட்டனர்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முக்கிய விழாவான பஞ்ச பூதங்கள் மற்றும் 'ஏகன் - அனேகன்' தத்துவத்தை விளக்கும் வகையில், அதிகாலை 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'அனேகன் - ஏகன்' தத்துவத்தை விளக்கும் வகையில், மாலை 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மகாதீபம் ஏற்றப்பட்டது.
மகாதீபத்திற்கான ஏற்பாடுகள்
மகாதீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் கொப்பரை இன்று மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. மகாதீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய் மற்றும் 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுவதும் பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி போன்ற பூக்களால் தோரணங்கள் கட்டி, அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

LIVE 24 X 7