இதனையடுத்து இன்று காலை கள்ளழகருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு பின் சைத்திரயோபசாரம் நடந்தது. பின்னர் ஏகாந்த சேவையில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில் புறப்பாடகிய கள்ளழகர் வைகை ஆற்றின் மையத்தில் தேனூர் மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேனூர் மண்டகபடியில் எழுந்தருளினார்.பின்னர் தேனூர் மண்டபத்தில் உள்பகுதியில் கள்ளழகர் எழுந்திருனார்.
சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில் தேனூர் மண்டகப்படி முன்பாக திருக்குளம் போன்ற வடிவமைக்கப்பட்டு நீர் நீரப்பபட்டு பூக்கள் மற்றும் மண்டூக முனிவரின் சிலை வைக்கப்பட்டு நாரை ஒன்று கட்டிவைக்கப்பட்டிருந்தது. பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப்பெருமாள் நாரைக்கு முக்தி அளிக்கும் வகையில் அங்கு கட்டப்பட்டிருந்த கொக்கு, பூஜைக்குப் பின்னர் பறக்கவிடப்பட்டது.
பின்னர் மண்டூக முனிவரின் உருவ மண் சிலைக்கு நம்மாழ்வார் திருமொழி பாடல் பாடப்பட்டு சாப விமோசனம் வழங்கும் பூஜை நடத்தப்பட்டது. இதனையடுத்து தேனூர் மண்டகப்படியை வலம்வந்த கள்ளழகர் அங்கிருந்த புறப்படாகினார்
சுதபஸ் என்ற மகரிஷி சுந்தரராஜ பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்துள்ளார். சுதபஸ் முனிவரை காண துர்வாச முனிவர் வந்தபோது தவத்தில் இருந்ததால் சுதபஸ் முனிவர் துர்வாசரைக் கவனிக்காமலும், சரியாக உபசரிக்கவில்லை. இதனால் கோபமுற்ற துர்வாச முனிவர் கோபம் மரியாதை தெரியாத மண்டூகமான நீ தவளையாகவே போ என சாபமிட்டார்.
இதனால் சாபம் பெற்ற சுதபஸ் முனிவர் தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என துர்வாச முனவரிடம் வேண்டியபோது வேதவதி’’ என்ற வைகை ஆற்றில் தவம் செய்தால் அழகர் கோவிலில் இருந்து சுந்தர ராஜ பெருமாள் வரும்போது சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறியுள்ளாதால் இந்த மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சாப விமோசனம் அளித்த பின்னர் கருட வாகனத்தில் எழுந்தருளியபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி தரிசனம் செய்த நிலையில், கள்ளழகர் வண்டியூர் அனுமார் கோயிலில் எழுந்தருளினர். பின்னர் வைகை வடகரை பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் திருமஞ்சணம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் இன்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய தசாவதாரம் நிகழ்வு நடைபெறவுள்ளது.
LIVE 24 X 7









