இந்நிலையில், முருகனின் மனைவி சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சிறையில் உள்ள தனது கணவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிகிச்சை பெறுவதற்காக சிறை மருத்துவரை அணுகிய போது சிறை வார்டன் கார்த்திக் தனது கணவரை அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வார்டன் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே, தனது கணவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டுமெனவும், வார்டன் கார்த்திக் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
LIVE 24 X 7









