K U M U D A M   N E W S

Tamil Nadu politics

"Senior Generational Abuser அவர்களே!" – ஸ்டாலினை சீண்டிய தவெக ஐடி விங்..!

அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளைக் கலாய்ப்பதற்கும், சமூக வலைதளங்களில் அனல் பறக்கப் பதிவுகளை வெளியிடுவதற்கும் தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறை ஊழல் விவகாரத்தில் திமுகவைச் சீண்டும் வகையில் தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

"முதல்வர் திறந்த 3 கோப்புகளில் ஒரு விக்கெட் OUT"....திமுகவை விளாசிய நிர்மல் !

முதலமைச்சர் விஜய், தன்னிடம் மூன்று கோப்புகள் இருப்பதாகக் கூறியிருந்த நிலையில், அதில் ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே திமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.

"அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது யாருக்கு உறுத்தியதோ" - கைதுக்கு பின் அன்பில் பேச்சு !

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான பிறகு அளித்த பேட்டியில் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்ற அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

அன்பில் மகேஷ் கைது : "மக்களின் கோபத்தைத் திசைதிருப்ப முடியாது!" - ஸ்டாலின் அதிரடி!

அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

ரூ.100 கோடி மோசடி வழக்கு....அன்பில் மகேஷ் முன்ஜாமினுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்துள்ள வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

காமாட்சி விளக்கில் தாமரை சின்னம்.. பாஜக ஆதரவில் அரசியல் ENTRY? பரபரக்கும் அரசியல் களம்!

சென்னையில் நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்ட காமாட்சி விளக்குகளின் அடிபக்கத்தில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோடம்பாக்கம் to கோட்டை...விஜய்யைத் தொடர்ந்து அரசியலில் குதிக்கும் நடிகர்கள்! பின்னணியில் மெகா பிளான்?

தமிழ்நாடு அரசியலில் விஜய்க்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

"தவெக - காங்கிரஸ் இடையே எந்த சலசலப்பும் இல்லை" - ராஜேஷ்குமார் விளக்கம் !

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்பதே கனவு எனத் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸின் அரசியல் இலக்கு, தவெக உடனான உறவு மற்றும் சுற்றுலாத்துறையின் முக்கியத் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

அரசு ஊழியர்கள் பேசக்கூடாதா? விஜய் அரசைச் விளாசிய செல்லூர் ராஜூ!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SIR ஆலோசனைக் கூட்டம்: ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் ! தவெக, திமுக உள்ளிட்ட 9 காட்சிகள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.