Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 21-09-2024
இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.
Vettaiyan Audio Launch: ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
Tamilisai Soundararajan on Animal Fat in Tirupati Laddu : திருப்பதியில் ஊழல் செய்வதற்குதான் லட்டில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளனர். இந்த சம்பவம் மக்களின் உணர்வுகளோடு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் மேலும் 15 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே செல்போனில் பேசியபடி அரசுப்பேருந்தை இயக்கிய ஓட்டுநர் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி.நட்டா ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவிடம் விளக்கம் கேட்டுள்ளார்
இந்தியாவில் ஆப்பிள் iphone 16 சீரிஸ் போன்களின் விற்பனை தொடங்கிய நிலையில், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருந்து iphone 16 போன்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 20-09-2024
பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, ’’பாகிஸ்தானுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது? ஜம்மு-காஷ்மீர் பாகிஸ்தானின் பகுதி அல்ல; அவர்கள் (பாகிஸ்தான்) முதலில் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.
''காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால், செல்வபெருந்தகையை கைது செய்வதில் ஆளும் கட்சியான திமுகவும், காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே செல்வபெருந்தகையை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்'' என்று கடிதத்தில் கூறப்படுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு இருப்பது தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முன்னதாக முந்தையை ஆட்சியில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக சந்திரபாபு நாயடு குற்றம்சாட்டியிருந்தார்.
துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ள பிலைண்ட் சைட் டிவைஸ் (Blindsight Device) சாதனத்தை “திருப்புமுனை சாதனம்” என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா தேர்தல் நடந்தது. அப்போது ஜோ பைடனும், டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர். அப்போது அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
பாஜகவால் ஒரே ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றும் இது திசை திருப்பல் தந்திரம் தான் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்’ நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒரு கட்சியின் ஆசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை சாடியுள்ளார்.
Dayanidhi Maran Defamation Case on EPS : எடப்பாடி பழனிச்சாமிக்க்கு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாடல். வேலை இல்லா திண்டாட்டத்தை மறைக்க முயற்சி என அஜய்குமார்
536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 AM Headlines Tamil | 19-09-2024
GOAT Movie Box Office Collection : விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான GOAT திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.413 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
One Nation One Election : முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்த ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
CM MK Stalin About Rahul Gandhi Death Threat : ராகுலுக்கு பாஜக நிர்வாகி மற்றும் சிவசேனா எம்எல்ஏ மிரட்டல் விடுத்தது தொடர்பான தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.