K U M U D A M   N E W S

தங்கத்தின் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,880-க்கு விற்பனை!

சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக, சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.82,880 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது பண்டிகை காலத்தில் நகை வாங்கத் திட்டமிட்டவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அவதூறு பரப்பும் யூடியூபர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும்- நடிகர் வடிவேலு

"அவதூறு பரப்பும் யூடியூபர்கள் மீது நடிகர் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நடிகர் வடிவேலு வலியுறுத்தியுள்ளார்.

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திமுக அரசின் துரோகம் - மக்கள் நலத் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் சாடல்!

கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

"விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது"- கமல்ஹாசன் கருத்து!

"விஜய்க்கு கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது" என்று கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

மலை கிராம மக்களிடையே மோதல் - போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோயில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசாரில் வாகனத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுத்ததால் பரபரப்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஷேல் கிணறுகள்…தமிழக அரசுக்கு கோரிக்கை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதிகளில் சட்டத்திற்க்கு புறம்பாக மூன்று ஷேல் கிணறுகள் குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உத்திரமேரூர் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதால் பொதுமக்கள் வேதனை!

காஞ்சிபுரம், உத்திரமேரூரில் உள்ள அரசு உள் விளையாட்டு அரங்கம், முறையான பராமரிப்பு இல்லாததால் சமூக விரோதச் செயல்கள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால், பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

11.19% பொருளாதார வளர்ச்சி - திராவிட மாடல் ஆட்சிக்கு சாட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அ.தி.மு.க. 10 ஆண்டுகளில் செய்யாத சாதனையை, தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி 4 ஆண்டுகளில் செய்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் 11.19% பொருளாதார வளர்ச்சி குறித்து அவர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்

ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் பெண் உள்பட 2 பேர் கைது!

12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.