K U M U D A M   N E W S
Advertisement

DC

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானில் சாம்பியன் பட்டம்.. உலக செஸ் சாம்பியன் ஷர்வானிகாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலிருந்து விலகல்? - டி20 உலகக் கோப்பை கனவுக்கு சிக்கல்!

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடாத ஹர்திக் பாண்ட்யா, குவாட்ரைசெப்ஸ் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அவர் முழுமையாகக் குணமடைந்தால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

2 மணி நேர பயணம் இனி 2 நிமிடம்.. சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு!

உல​கின் மிக உயர​மான பாலம் சீன நாட்​டில் திறக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இது​வரை 2 மணி நேர​மாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்​களாக குறைந்​துள்​ளது.

மகளிா் உலகக் கோப்பை இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை பலப்பரீட்சை!

மகளிருக்கான 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

சூர்யா வீட்டு வேலைக்கார கும்பல் ரூ. 42 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது!

டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.