Live : Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு
Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு
Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு
Cuddalore Govt Medical College Hospital : கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கான்கீரிட் சேதம், கதிர்வீச்சு நோய் நாடல் துறை பகுதிக்கு செல்லும் மேல்பகுதிகளில் கான்கீரிட் சேதம்
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 3 பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை. ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் உடல் - பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் தொடர் போராட்டம்
பெரியாரின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து த.வெ.க தலைவர் விஜய் தனது X தளத்தில் பதிவு. சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டு கிடந்த மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் - விஜய்
நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரில் டாக்டர் காந்தராஜ்-க்கு சம்மன். டாக்டர் காந்தராஜ் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து. நீடித்த ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துவதாக முதலமைச்சர் தனது X தளத்தில் பதிவு
''நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழை திரைப்படத்தின் வெற்றி விழாவில் அம்மாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய இயக்குநர் மாரி செல்வராஜ்