K U M U D A M   N E W S

Bus

ரூ.23 கோடியில் பிரம்மாண்ட பேருந்து நிலையம்...புதுக்கோட்டையில் திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

புதுக்கோட்டையில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை செல்லும் CM விஜய்...! பேருந்து நிலையம் திறப்பு முதல் ரோடு ஷோ வரை !

முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரோடு ஷோ திட்டம் என மாவட்டமே பரபரப்பாகியுள்ளது.

பென்ஷன் இல்லை... கரன்ட் பில் ஷாக்... ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பாதிப்பு! விஜய் அரசுக்கு என்னதான் ஆச்சு?

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்களை நெருங்கும் நிலையில், விலைவாசி உயர்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை தாமதம், மின் கட்டண உயர்வு, இலவசப் பேருந்து திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு எனப் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.

“அந்த அவமானத்தை எப்போதும் சுமப்பேன்!” Peddi சர்ச்சையில் ஜான்வி கபூரின் அதிர்ச்சி பேச்சு!

Peddi படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார்.

பில்லா ஜெகன் வருகை... தூத்துக்குடி தவெகவில் தகிக்கும் அரசியல்!

பில்லா ஜெகன் தவெகவில் இணைய முயற்சி செய்து வரும் நிலையில், அவரது வருகையால் கட்சியில் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளூர் நிர்வாகிகள் சிலர் முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுகிறது.

மறைமலைநகரில் பரபரப்பு ! பேருந்து நிலையம் அமைக்கக்கூடாது ! அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் !

மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

15 லட்சம் குழந்தைகள் பாதிப்பு.. பாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் மூலம் அரங்கேறும் பாலியல் சுரண்டல்!

பாகிஸ்தானில் 15 லட்சம் குழந்தைகள் ஆன்லைன் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுவதாக யுனிசெப் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

"கக்கூஸ் லீடர் உதயநிதி"... அரசு பேருந்தில் இடம்பெற்ற வசனம்... அலறிப்போன பயணிகள்...!

புதுச்சேரியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் பேருந்தின் பின்புற எல்இடி திரையில் திமுகவை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

”திருட்டு***… என்ன ம*ரு.. வெங்காயத்துக்கு..” - ஆபாசமாக மிரட்டிய தவெக எம்.எல்.ஏ சிவக்குமார்.. வைரலாகும் வீடியோ..!

சாக்கடை கட்டும் பணியை நேரில் பார்த்துவிட்டு, பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாகக் கூறப்படும் தவெக எம்.எல்.ஏ சிவக்குமாரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிப் பயணத் திட்டம்... வெறிச்சோடும் ஆட்டோ ஸ்டாண்டுகள்? வெறியாகும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத்தை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்டுள்ள ‘வெற்றிப் பயணம்’ திட்டம் ஒருபுறம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம் என ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.