K U M U D A M   N E W S

திருமாவை வைத்து திமுக மது ஒழிப்பு நாடகம் நடத்துகிறது – எல்.முருகன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் எதிர்பார்த்த முதலீடு வராததை திசை திருப்பவே மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகத்தை மு.க.ஸ்டாலினும் திருமாவளவனும் அரங்கேற்றி வருவதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

’திருமாவளவன்-மு.க.ஸ்டாலின் நாடகம்’.. ’விஜய் பொதுவானவர் அல்ல’.. எல்.முருகன் தாக்கு!

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் மொட்டை அடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து எல்.முருகனிடம் கேட்டபோது, ‘இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று அதற்கான நடவடிக்கை முறையாக எடுப்போம்’என்றார்.

#BREAKING : மகாவிஷ்ணு விவகாரம்; அதிகாரிகள் ஆலோசனை

மகாவிஷ்ணு விவகாரம் - முதல்வரின் தனிச் செயலாளர் சண்முகத்துடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி, அதிகாரிகள் ஆலோசனை. மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் வழங்கப்பட்ட நிலையில் ஆலோசனை

கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிகளில் பேரிடர் மீட்பு பயிற்சி

பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இணைந்து மழைக்காலத்தில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் பேரிடர் மீட்பு பயிற்சி

முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்திப்பு.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்! புஸ்ஸி ஆனந்த் ஆறுதல்

பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து தவெக புஸ்சி ஆனந்த் ஆறுதல்.

‘தாதா’வுக்கு இடமில்லை.. இந்தியா ஒருநாள் ‘கோட் XI’ வெளியிட்ட சுழற்பந்து வீச்சாளர்

இந்திய கிரிக்கெட்டின் எப்போதைக்குமான சிறந்த 11 பேர் கொண்ட ஒருநாள் அணியை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா வெளியிட்டுள்ளார்.

Thirumavalavan Old Video Controversy : முதலமைச்சருடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்திப்பு

முதலமைச்சருடன் விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்திப்பு.

பாமக PhD.. விசிக LKG.. அன்புமணி VS திருமா...

பாமக PhD.. விசிக LKG.. அன்புமணி VS திருமா...