K U M U D A M   N E W S

வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் உதவியுடன் சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

2 நகரங்களில் மினி டைடல் பூங்கா... தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தின் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. 

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

திருவண்ணாமலை செங்கம் அருகே 11ம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.  

கார்த்திகை தீபத்திற்கு தயாராகும் அண்ணாமலையார் திருக்கோயில்

அண்ணாமலையார் திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனை. 16 கால் மண்டபம் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் விழா நடைபெற்றது

திருவண்ணாமலை தீபத் திருவிழா... சிறப்பாக நடைபெற்ற பந்தக்கால் முகூர்த்தம்!

உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (செப். 23) காலை பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

"அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்.." - அமைச்சர் அதிரடி பேச்சு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் நழுவிச் சென்றார்.

நிலை தடுமாறிய வீட்டிற்குள் புகுந்த அரசுப்பேருந்து.. அலறிய பயணிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது நிலைதடுமாறிய அரசுப் பேருந்து சாலையோரம் உள்ள வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநர், அரசு பேருந்து ஓட்டுநர், பெண் பயணி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லப்பர் பந்து, நந்தன், கோழிப்பண்ணை செல்லத்துரை... இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 6 படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 6 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. இதில், எந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது என இப்போது பார்க்கலாம்.

குவிந்த பக்தர்கள்.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ரயிலில் இடம் இல்லாததால் ரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது 

Kakka Thoppu Balaji Encounter : ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் - சம்பவ இடத்தில் ஆய்வு

Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.