School College Holiday: கனமழை எதிரொலி.. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்தில் அருவி போல் கொட்டிய மழைநீரால் பயணிகள் அவதி
நாளை கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் அதிகனமழை பெய்யக்கூடும்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கனமழையால் வயல் வெளிக்குள் தண்ணீர் புகுந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு வரும் நாட்களில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
ராமநாதபுரத்தில் நேற்று (நவ. 19) நள்ளிரவு முதல் தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் முழுவதும் 500 ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி பாதிப்படைந்துள்ளது.