K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=150&order=created_at&post_tags=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் - ராஜ்நாத்சிங்

பயங்கரவாத நாட்டுக்கு அணு ஆயுதம் தேவையா? பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

17 வருஷமா குழந்தை இல்லையா? பெண்ணை நூதனமாக ஏமாற்றிய மந்திரவாதி

Witchcraft Arrest in Chennai : 17 ஆண்டுகளாக குழந்தை இல்லாத பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி 5 சவரன் தங்க நகையினை திருடிய மாந்திரீக மந்திரவாதியினை அதிரடியாக கைது செய்துள்ளது காவல்துறை.

பகவத் கீதையுடன் அமைச்சராக பொறுப்பேற்பு- யார் இந்த அனிதா ஆனந்த்?

Anita Anand: கனடா- அமெரிக்கா இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இந்திய வம்சாவளியினைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

“பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்” - பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் எதிரொலி: தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் செய்திகள் போல போலி இணைப்புகள் மற்றும் APK கோப்புகள் குறித்து கவனமாக இருக்கும்படி தமிழக சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கையெறி குண்டுகளுடன் டிரோன்கள்..தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்..!

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா வைரஸ்...தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை

கேரளாவில் மீண்டும் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

"பஹல்காம் தாக்குதலுக்கு TRF அமைப்பே காரணம்" - விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.

காட்பாடியில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மேத்தா கிரி பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சுற்றுச்சூழல், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.

கோயில் திருவிழாவில் பிரச்னை இல்லை - புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில், கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான, தேரோட்டத்தின்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என புதுக்கோட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மீனவர்கள் மீதான தாக்குதல்...மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்கள் மீதான தாக்குதல் மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை...மத்திய அரசு உத்தரவு

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீதான வழக்கு- காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவில் தேரை கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...அதிரடி காட்டிய அதிகாரிகள்

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி உணவகத்தை தற்காலிகமாக மூடினர்

அமலாக்கத்துறையை பார்த்து திமுக பயப்படுகிறது – இபிஎஸ் விமர்சனம்

அதிமுக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை திமுக சொல்லக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்.. விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர்!

திருவனந்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, CPI(M), காங்கிரஸ் கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டம் - 10 பேரிடம் விசாரணை

சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடிக்கு எதிரான வழக்கை முடித்துவைத்த அமலாக்கத் துறை!

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஊழலில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறையின் அறிக்கையை, தில்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பதிலுரைக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் தரைமட்டத்தில் இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் தலைநிமிர்ந்து நிற்பதாக பேசிய முதலமைச்சரின் பதிலுரைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

அமைதி பூங்காவாக தமிழகம்...காவல்துறைக்கு முதல்வர் புகழாரம்

சாதி, மதக்கலவரம் இல்லாத அமைதியான சூழல் தமிழ்நாட்டில் உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு