மத்திய மோட்டார் வாகன விதிப்படி சுற்றுலா வாகனம் உரிமத்தை 12 ஆண்டுகள் வரை வாகனத்தை பயன்படுத்தலாம். டீசல் வாகனமாக இருந்தால் 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. சுற்றுலா வாகனத்தை 8 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு விதிகளில் தெரிவிக்கவில்லலை. அதனால், தங்களின் உரிமத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன், மாநில கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு மாநில அரசு மட்டுமே உரிமம் வழங்க முடியும். வாகனங்களின் ஆயுட் காலத்தை கருத்தில் கொண்டு 8 ஆண்டுகளுக்குள் வாகனத்தை மாற்ற வேண்டும் என உரிமம் வழங்கிப்படுகிறது. இல்லாவிட்டால் உரிமம் காலாவதியாகிவிடும்.
மத்திய அரசின் விதிகள் 1993, 2021,2023-ன் படி மாநில அரசு உரிமம் வழங்கவில்லை. மத்திய அரசின் புதிய விதியை மாநில அரசு இன்னும் நடைமுறை படுத்தவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சத்ய நாராயண பிரசாத், சுற்றிலா வாகனங்களுக்கான ஆயுட்காலம் 8 ஆண்டுகள் என மாநில அரசு நிர்ணயித்துள்ள முடிவில் தலையிட முடியாது. உரிமம் புதுப்பிக்க மத்திய போக்குவரத்து விதிகளின் படி பணம் செலுத்தியிருந்தால், அதற்கு மாநில அரசு எந்த விதித்திலும் பொறுப்பு ஏற்க தேவையில்லை என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
LIVE 24 X 7









