K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=50&order=created_at&post_tags=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D

கோவை குண்டுவெடிப்பு வழக்கு.. டெய்லர் ராஜா 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிமன்றம் அனுமதி!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான டைலர் ராஜாவைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்த நிலையில் ஐந்து நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தை.. பெற்றோர் செய்த கொடூர செயல்

மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை, ஜன்னல் வழியே வீசிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

புகார் மீது நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு-துணை ஆணையரை விடுவித்து உத்தரவு

கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கணவருடன் சண்டை.. வீட்டிலிருந்து வெளியேறிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

அரியானாவில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

OLA நிறுவனத்தில் வேலை.. ரூ.22 லட்சம் மோசடி செய்த இருவர் கைது

OLA நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக போலி பணியாணை வழங்கி 56 நபரிடம் ரூ. 22 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உணவில் அதிக உப்பு.. கணவன் தாக்கியதில் கர்ப்பிணி மனைவி தவறி விழுந்து உயிரிழப்பு!

உணவில்அதிக உப்பு சேர்த்ததாக மனைவியை கடுமையாக தாக்கிய கணவரால் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து 5 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவலாளி அஜித்குமார் மரணம்.. அமமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் பெண் எஸ்எஸ்ஐ உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை..!

ராசிபுரம் அருகே பெண் எஸ்.எஸ்.ஐ காவல் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமாருக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய்.. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி தவெக மனு!

எழும்பூர், காவல் ஆணையர் அலுவலகம், ஆர்பாட்டம், சிவகங்கை, அஜித்குமார்,த.வெ.க சார்பில் ஆர்ப்பாட்டம்

தொடரும் லாக்கப் மரணம்.. முதல்வர் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

திருப்புவனத்தில் காவல்நிலையத்தில் உயிரிழந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் இளைஞர் உயிரிழந்த விவகாரம் – 5 காவலர்களுக்கு நீதிமன்ற காவல்

திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், ஐந்து காவலர்கள் மீது கொலை வழக்குப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கண்ணியத்தோடு நடந்துகொள்ளுங்கள்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

“கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திருப்புவனம் விவகாரம்: முதல்வருக்கு நயினார் 9 கேள்விகள்..!

சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

போலீசார் விசாரணையில் இளைஞர் மரணம்.. பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

லாக்அப் இறப்புகள் வேதனை அளிக்கிறது.. செல்வப்பெருந்தகை

லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பழவேற்காடு அருகே 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை.. துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 11 பேர் கைது!

பழவேற்காடு அருகே நடைபெற்ற ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகையின் போது, கடல் வழியாக அதானி துறைமுகத்திற்குள் ஊடுருவ முயன்ற 9 பேரும், சாலை வழியாக முயன்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீக் ஹவர்சில் தண்ணீர் லாரிகளுக்கு தடை.. காவல்துறை உத்தரவு

காலை 7:30 மணி முதல் 9 மணி வரை தண்ணீர் லாரிகள் இயங்க தடை விதித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

பட்டியலின மக்கள் மீதான வன்முறை: திமுக ஆட்சியில் உச்சம்- நயினார் நாகேந்திரன்

பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் கொடூர உச்சத்தை அடைந்திருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

காதல் ஆசை காட்டிய துணை நடிகை.. லட்சங்களை இழந்த ஐடி வாலிபர்

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக துணை நடிகை மீது காதலன் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

'நீங்கள் பாகிஸ்தான் உளவாளி'.. பெண்ணை மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரியலூரில் சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் போராட்டம்.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையை முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்கு சாதகமாக காவல்துறையினர் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.