K U M U D A M   N E W S

அரசு

தமிழகத்தில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 3 நகராட்சிகளில் மட்டும் 35 டெண்டர்களை நகராட்சி நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது; உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பழனி கோவில் விவகாரம்: அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரளத்தை பின்பற்றி தமிழகத்திலும்.. பஸ் டிக்கெட்டில் விளம்பரம்.. முதலமைச்சர் கொடுத்த ஐடியா!

கேரளத்தைப் பின்பற்றித் தமிழக அரசுப் பேருந்து பயணச்சீட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு வருவாயைப் பெருக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

3 மாதங்களில் 19 மரணங்கள்: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பிரசவத்தின் போது 19 தாய்மார்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி வகுப்பறையில் கொடூரம்: 12-ஆம் வகுப்பு மாணவனுக்குக் கத்திக்குத்து!

சிவகங்கை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே சக மாணவனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி? வைகைச்செல்வனின் பதில் பரபரப்பு

அ.தி.மு.க.வில் இருந்து விலகிய காரணம், எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனம் மற்றும் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுக்கு ஆதரவு குறித்து வைகைச்செல்வன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தூய்மைப் பணியாளர்களிடம் 'கொத்தடிமை' ஒப்பந்தம்? ஆத்தூர் நகராட்சியில் பரபரப்பு!

சேலம் ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் அத்துமீறி கையெழுத்து பெற்றுத் தனியார் நிறுவனம் ஒன்று கொத்தடிமை போல நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய வழக்கு: விசாரணையில் இறங்கிய அமலாக்கத்துறை!

தவெக எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் அமலாக்கத்துறை தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஊராட்சி செயலாளர் நியமனம் ரூ.10 லட்சம் வரை வசூலா? புதிய முறைகேடு புகார்!

ஊராட்சி செயலாளர் நியமனத்தில் முறைகேடு மற்றும் பண வசூல் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.