உலகம்

"பிஃபா தலைவரை நீக்குவது மிகப்பெரிய தவறு!" - டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Donald Trump supports FIFA President
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் வணிக உரிமைகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA), ஆசிய கால்பந்து கூட்டமைப்பான AFC மற்றும் வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்பான CONCACAF ஆகியவை அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் பிஃபா உலகின் மிகப்பெரிய விளையாட்டு கூட்டமைப்பாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு இதன் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்குப் பதிலாக புதிய தலைவராக ஜியானி இன்ஃபான்டினோ பொறுப்பேற்றார். 2019 மற்றும் 2023-ம் ஆண்டு போட்டியின்றி மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார்.

பிஃபா தலைவர் தேர்தல் அடுத்த ஆண்டு மொராக்கோவில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. பிஃபா தலைவராக தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக ஜியானி இன்ஃபான்டினோ தெரிவித்திருந்தார். இதனால் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வேல்ஸ் நாட்டின் கால்பந்து சங்கம் அவருக்கான ஆதவை திரும்பப் பெற்றது.

இந்த நிலையில், மூன்று முக்கிய கூட்டமைப்புகள் ஜியானி இன்ஃபான்டினோவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளன.பிஃபா தொடர்புடைய நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் தோல்வியடைந்த நிலையில், ஜியானி இன்ஃபான்டினோவுக்கு எதிராக மூன்று முக்கிய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளன.

டிரம்ப் ஆதரவு:

பிஃபா தலைவர் இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்குவதற்கான எந்தவொரு முயற்சியும் மிகப்பெரிய தவறாக அமையும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம், சர்வதேச கால்பந்து நிர்வாகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விவகாரத்தில் இன்ஃபான்டினோவுக்கு அமெரிக்க அதிபரின் ஆதரவு கிடைத்துள்ளது.

பிஃபா உலகக் கோப்பையின் வணிக உரிமைகள் தொடர்பான இந்த விவகாரம், கால்பந்து நிர்வாக அமைப்புகளுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை மேலும் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.