செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கேற்ப தனது கல்வி முறையையும் சீனா அதிரடியாக மாற்றியமைத்து வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், சீனப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்பட்டு வந்த 12,200 இளங்கலைப் படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 10,200 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மொத்தத்தில், நாட்டின் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் சுமார் 30 சதவீதம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில், மாணவர்கள் படித்து முடித்ததும் வேலை கிடைக்கும் வகையில் பாடத்திட்டங்களை மறுசீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது. தற்போது அந்நாட்டில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 16 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
இதனால், கலை, மனிதநேயம், வெளிநாட்டு மொழிகள், மேலாண்மை உள்ளிட்ட பல பாரம்பரியப் படிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரிவுகளில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற வேலைவாய்ப்புகள் இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது.
உதாரணமாக, ஷாங்காய் பல்கலைக்கழகம் தனது ‘புராடக்ட் டிசைன்’ படிப்பை நிறுத்தியுள்ளது. டிசைனிங் மற்றும் மாடலிங் போன்ற பல பணிகளை தற்போது AI மென்பொருள்களே திறம்படச் செய்து வருவதால், அந்தப் படிப்புக்கான தேவை குறைந்துவிட்டதாக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்குப் பதிலாக, AI, டேட்டா சயின்ஸ், ரோபாட்டிக்ஸ், டிஜிட்டல் ஃபைனான்ஸ், அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங் போன்ற எதிர்கால தொழில்நுட்பப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குறைந்தது ஒன்பது பல்கலைக்கழகங்கள் ‘எம்போடீட் இன்டலிஜென்ஸ்’ என்ற புதிய பாடத்தையும் தொடங்கியுள்ளன. ரோபோக்களுக்குள் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் இதன் மையக் கருத்தாகும்.
உலகளாவிய AI போட்டியில் அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் நாடாக சீனா உருவெடுத்துள்ள நிலையில், கல்வித்துறையிலும் அதே வேகத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகளில் பல ஆண்டுகள் எடுக்கும் மாற்றங்களை, வெறும் நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தியிருப்பது சீனாவின் நிர்வாகத் திறனை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியுள்ளது.
"எதிர்கால வேலைகளுக்கேற்ற கல்வியா... அல்லது காலாவதியாகும் பட்டப்படிப்புகளா?" என்ற கேள்விக்கு, தனது கல்விக் கொள்கை மூலம் சீனா பதில் சொல்லத் தொடங்கியுள்ளது.

LIVE 24 X 7