K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி..

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

"ரூ.2,858 கோடி" - சென்னை மக்களுக்கு அடித்தது லக்

சென்னை ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா..? - நீதிமன்றம் உத்தரவவால் எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா...

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்தசஷ்டி விழா யாக பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க தொடங்கினர்

"மிக கனமழை" பயமுறுத்தும் கடல்.. "மிஸ் ஆகாது கண்டிப்பா நடக்கும்.."

சென்னை, திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கை கோர்க்கும் Vijay - Thiruma ? - அரசியல் களமே ஆடிப்போக வந்த தகவல்

சென்னையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய், விசிக தலைவர் திருமாவளவன் இருவரும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

திடீர் ஸ்லிப்.. ஒரே இடி " மேலே ஏறி இறங்கிய வேன்.. " திக் திக் வீடியோ வெளியீடு

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த டெம்போ டிராவலர் வாகனம் மீது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும்.. மாநாட்டைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த திட்டம்..

டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் இருந்து அவர் தனது முதல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.